சீமானை எச்சரித்த ராகவா லாரன்ஸ்..! உண்மையான ஆம்பளயா ?

0 1562

சீமான் தான் தமிழ் தாயின் மூத்த பிள்ளையா ? நாங்கள் எல்லாம் அமெரிக்க காரனுங்களுக்கா பிறந்தோம் ? என்று ரஜினி பிறந்த நாள் விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்தது. இதில் இயக்குனர் எஸ்பி முத்துராமன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், பி.வாசு, கலைஞானம், நடிகை மீனா, கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்று பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினியின் அரசியல் வருகைக்கு மேடைக்கு மேடை எதிர்ப்பு தெரிவித்துவரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது, அரசியல் என்னும் ஓட்டபந்தயத்தில் எல்லோருமே ஓடி அதில் வெற்றி பெறுவதுதான் ஆம்பள, தான் மட்டுமே ஓட வேண்டும் என்று நினைப்பவர்களை என்ன சொல்வது என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

சீமான் பெயரை சொல்ல அஞ்சும் ராகவா லாரன்சை ஆண்மகனா? என்று விமர்சித்த சீமானின் தம்பிகளுக்கும் ராகவா லாரன்ஸ் தக்க பதிலடி கொடுத்தார்.

மேடையில் தனி மனித தாக்குதல் வேண்டாம் என்று சுட்டிக்காட்டிய லாரன்ஸ், தான் திட்ட வரவில்லை திருத்த வந்துள்ளேன் என்றார்.

பெயர் சொல்ல விரும்பவில்லை என்று கூறிய நிலையில் ராகவா லாரன்ஸ், ஒரு கட்டத்தில் சீமான் அண்ணா என்று குறிப்பிட்டதும் அவரது பெயரை உச்சரிக்க வேண்டாம் என்று ரசிகர்கள் கூச்சலிட்டனர்.

முன்னதாக தர்பார் பட இசை வெளியீட்டு விழாவில், கமல் குறித்து தான் பேசிய கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதற்கு கமலிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக கூறிய ராகவா லாரன்ஸ், ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் இணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments