50 ரூபாய்க்கு இரண்டு பிரியாணி கேட்டு ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்

0 410

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 50 ரூபாய்க்கு இரண்டு பிரியாணி கேட்டு ஹோட்டல் உரிமையாளரை குடிபோதையில் தாக்கிய 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.

பேருந்து நிலையம் அருகே கலிம் என்பவர் காஜா என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இங்கு நேற்று குடிபோதையில் சென்ற இரு ஆட்டோ ஓட்டுநர்கள், 240 ரூபாய் விலையுடைய இரண்டு பிரியாணியை வெறும் 50 ரூபாயை கொடுத்துவிட்டு பார்சல் செய்யும் படி அதட்டலாக கூறியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் கடை ஊழியரை முதலில் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் பின்னர் உரிமையாளரை தாக்கினர்.

பதிலுக்கு ஹோட்டல் உரிமையாளரும் தாக்கிய நிலையில், சிசிடிவி காட்சி அடிப்படையில் கோனாமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஜெய்பாரத் மற்றும் செல்வபிரபுவை வாணியம்பாடி போலீசார் கைது செய்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments