இந்திய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள்

0 383

நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர் அபிஜித் பானர்ஜியும் அவரது மனைவி எஸ்தர் டுப்லோவும், இந்திய பாரம்பரிய உடை அணிந்து அதை பெற்றுக் கொண்டனர்.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டுப்லோ மற்றும் அமெரிக்காவின் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது.

இந்த பரிசு வழங்கும் விழா சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் இசை அரங்கில் நடைபெற்றது. அப்போது அபிஜித் பானர்ஜி வேட்டி குர்த்தா அணிந்தும், அவரது மனைவி  எஸ்தர் புடவை அணிந்தும் நோபல் பரிசை பெற்றுக் கொண்டனர். சர்வதேச வறுமை ஒழிப்பு பற்றிய ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments