பாரதியார் சிலை அடங்கிய பல்லக்கை தோளில் சுமந்து சென்ற அமைச்சர்கள்

0 321

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை ஒட்டி வானவியல் பண்பாட்டு மையம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஜதி பல்லக்கு ஊர்வலத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோயில் முகப்பில் இருந்து பாரதி நினைவு இல்லம் வரை நடைபெற்ற ஊர்வலத்தில் பாரதியாரின் சிலை கொண்ட பல்லக்கினை கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன், இல.கணேசன், நடராஜன் உள்ளிட்டோர் தோளில் சுமந்து சென்றனர்.இதற்கு முன்னதாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments