குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ராகுல் காந்தி கண்டனம்

0 201

நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு, ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா என்பது, இந்திய அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என்று கூறியிருக்கிறார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரிப்போர் அனைவரும், நமது தேசத்தின் அடித்தளத்தின் மீது தாக்குதல் நடத்தி அழித்தொழிப்பதாகவும், ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டிருக்கும் டுவிட்டர் பதிவில், இந்திய அரசியல் சாசனத்தை படிப்படியாக தகர்த்து வரும், மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை கண்டித்து காங்கிரஸ் தொடர்ந்து போராடும் எனத் தெரிவித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments