3 ஆண்டுகளுக்கு பிறகு 2 டி.எம்.சி யை எட்டிய புழல் ஏரி

0 211

தொடர் மழை மற்றும் கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக, 3 ஆண்டுகளுக்கு பிறகு புழல் ஏரியின் கொள்ளளவு 2 டி.எம்.சி யை எட்டியது.

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரி வழியாக புழல் ஏரிக்கு வருகிறது.

மேலும் தொடர் மழை காரணமாகவும் 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி  மொத்த கொள்ளளவு கொண்ட ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, தற்போது நீர்இருப்பு 2 ஆயிரத்து 54 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது.

வினாடிக்கு 460 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 89 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வறண்டு கிடந்த ஏரியில் தற்போது நீர்இருப்பு 2 டி.எம்.சி.யை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments