குறுக்கு வழியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி

0 258

குறுக்கு வழியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை என்பதையே கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம், ஹசாரிபாக்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கர்நாடகாவில் மக்கள் அளித்த தீர்ப்பை காங்.,- மஜத., பின்வாசல் வழியாக, குறுக்கு வழியில் திருடப் பார்த்தது என்றார்.மக்கள் அவர்களுக்கு தற்போது சரியான பாடம் கற்றுக் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பா.ஜ., மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையே இடைத்தேர்தல் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக கூறிய அவர், பா.ஜ.வால் மட்டுமே அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் என மக்கள் நம்புவது, நிரூபனமாகி உள்ளது என்றார். கர்நாடக மக்களுக்கு நன்றி கூறுவதாக மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments