திமுக நீதிமன்றத்திற்கு சென்றாலும் தேர்தல் நடக்கும் -அமைச்சர் தங்கமணி நம்பிக்கை

0 119

உள்ளாட்சி தேர்தல் யாரால் தடைபடுகிறது என்று மக்களுக்கு நன்றாக தெரியும் என்று திமுகவை மறைமுகமாக அமைச்சர் தங்கமணி சாடியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களின் நேர்க்காணல் நாமக்கலில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா முன்னிலையில் நடைபெற்றது.

அதன்பின்னர் பேசிய அமைச்சர் தங்கமணி, திமுக நீதிமன்றத்திற்கு சென்றாலும் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், தேர்தல் மூலம் மக்கள் பதிலளிப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும், மின்சாரத்துறையில் காலியாக உள்ள ஐந்தாயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு, 80 ஆயிரம் பேர் மனு அளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments