ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு இணையதள தொடர் - கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவு

0 399

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக வெளியிட தடை கோரிய மனுவிற்கு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தலைவி என்ற திரைப்படம் உருவாகி வரும் நிலையில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் குயின் என்ற இணையதள தொடர் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு தடை கோரி, தீபா தொடர்ந்த வழக்கின் ஆவணங்கள் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கின் ஆவணங்களை கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பிற்கு உடனடியாக வழங்க உத்தரவிட்டனர். தீபா தாக்கல் செய்த மனுவிற்கு டிசம்பர் 11ம் தேதிக்குள் கௌதம் வாசுதேவ் மேனன் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments