பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்

0 265

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ள பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், தான் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

பழம்பெரும்  பாடகியான லதா மங்கேஷ்கர், உடல்நலக் குறைவு காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டு நிமோனியா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து குணமடைந்த அவர், சுமார் 28 நாட்களுக்கு பிறகு வீடுதிரும்பியுள்ளார். இதையடுத்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ள லதா மங்கேஷ்கர், தனக்காக பிரார்த்தித்த ரசிகர்கள், நலம் விரும்பிகள், சிகிச்சையளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது உருக்கமான நன்றியைத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments