பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும் சோனியா காந்தி

0 190

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களை கண்டிக்கும் விதமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாளை தனது பிறந்த தின கொண்டாட்டங்களை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 73ஆவது பிறந்த தினமான நாளைய தினத்தைக் கொண்டாட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் காங்கிரஸ் சார்பில் செய்யப்பட்டிருந்தன.

இதனிடையே தெலங்கானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான கொடூரமான பாலியல் குற்றச்சம்பவங்களால் நாட்டின் பல பகுதியில் சோகமும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது பிறந்த தின கொண்டாட்டங்களை சோனியா காந்தி தவிர்க்க முடிவி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments