3 வயது குழந்தை கொலை.. தாயின் 2 வது கணவர் கைது

0 308

சென்னை பள்ளிக்கரணை அருகே, இரு குழந்தைகளின் தாயை திருமணம் செய்து குடும்பம் நடத்திய நபர், 3 வயது ஆண் குழந்தையை அடித்து கொன்றதாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை அருகே, சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கும், அதே பகுதியில் கணவரை பிரிந்து இரு குழந்தைகளுடன் வசித்த கங்கா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் கங்காவை திருமணம் செய்து ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கங்கா தனது 3 வயது குழந்தை அருணை, வெங்கடேசன் பொறுப்பில் விட்டுவிட்டு, கேரளாவில் சகோதரி வீட்டில் இருக்கும் மகளை பார்க்க சென்று விட்டார்.

இந்நிலையில் குழந்தை அருண் சாப்பிடும்போது மயக்கமடைந்ததாக கூறி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் வெங்கடேசன் அனுமதித்துள்ளார்.

அப்போது குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்ததால் அவர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது கேள்விப்பட்டு சென்னை திரும்பிய கங்கா, வெங்கடேசன் மீது போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், குழந்தையை அடித்துக்கொன்றதாக வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments