காட்பாடி-அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் தண்டவாளத்தில் விரிசல்

0 281

அரக்கோணம் அருகே அதிகாலையில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல், உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

காட்பாடி-அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் அனவர்திகான்பேட்டை- சித்தேரி ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் இன்று அதிகாலை விரிசல் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்த வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த ஆலாப்புழா எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ் மற்றும் சேரன் விரைவு வண்டிகள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின்னர், தண்டவாள விரிசல் சரிசெய்யப்பட்டு, மூன்று விரைவு ரயில்களும் ஒன்றான்பின் ஒன்றாக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments