கனமழைக்கு வாய்ப்பு..!

0 978

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழையும், 7 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் ராமேசுவரத்தில் 8 செ.மீட்டரும், தங்கச்சிமடத்தில் 4 செ.மீட்டரும், பாம்பனில் 3 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடாவில்  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் அந்த கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், நகரின் அதிக பட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை  77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments