மாணவர்களின் தேர்வு கால மன அழுத்தத்தை போக்க புதிய திட்டம்..!

0 559

பள்ளி மாணவர்களின் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை போக்க புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில், தேர்வு தொடர்பான மன அழுத்தம் இல்லாதவர்களாக மாணவர்களை மாற்ற அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிபிசி  திட்டம் 2020 ஆம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் படி தேர்வுக்கு மாணவர்களின் தனித்துவத்தை சோதிக்கும் போட்டி நடத்தப்படும் என்றும், வெற்றி பெற்றவர்களுக்கு தேர்வுகள் அற்ற தனித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போட்டியில் 5 தலைப்புகள் கொடுக்கப்படும் என்றும் அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து 1500 வார்த்தைகளுக்குள் எழுத வேண்டும் என்றும் வெற்றி பெறுவோர் தம்மை சந்தித்து கலந்துரையாடலாம் என்றும் மோடி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments