விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டறிந்த சண்முக சுப்பிரமணியனுக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து

0 691

நிலவில் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடித்த, தமிழக பொறியாளர் சண்முக சுப்பிரமணியனை நேரில் வரவழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்தார்.

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் அதிகாரபூர்வ இல்லத்தில், எடப்பாடி பழனிசாமியை, சண்முக சுப்பிரமணியன் சந்தித்தார்.

நாசாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து, விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை, தமிழரான, பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்தார். இவரை தனது இல்லத்திற்கு நேரில் வரவழைத்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து, பாராட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments