ஆட்சியமைக்க உதவினால் மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி.. மோடியின் ஆஃபரை நிராகரித்த சரத்பவார்

0 243

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்க உதவினால் தனது மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாக மோடி கூறியதை தான் நிராகரித்ததாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மராட்டியத்தில் நடந்த அரசியல் திருப்பங்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. கூட்டணி அமைத்து போட்டியிட பிஜேபி மற்றும் சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பதவிகளுக்காக ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் அக்கூட்டணி உடைந்தது.

பின்னர் தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா - காங்கிரஸ் கட்சிகள் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்க தயாரான போது, தேசியவாத காங்கிரசை உடைத்து அஜித் பவார் சொன்னதை நம்பி ஒரே இரவில் அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த குடியரசுதலைவர் ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டது. பின் பிஜேபி சார்பில் பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.

ஆனால் பல திருப்பங்களுக்கு பிறகு அஜித் பவாருக்கு யாரும் அவர்கள் கட்சியில் ஆதரவு தரவில்லை. இனி ஆட்சியில் நீடிக்க முடியாது என்பதை உணர்ந்து மூன்றே நாளில் பதவியை ராஜினாமா செய்தார் பட்னாவிஸ். பின் தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்து உத்தவ் தாக்கரே முதல்வராகியுள்ளார்.

இந்நிலையில் மராத்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சரத் பவார், மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் ஆட்சியமைக்க உதவிட வேண்டும் என்று மோடி தன்னிடம் கேட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தன்னை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என தானோ, மோடியோ பேசவில்லை என்றும், தனது மகள் சுப்ரியா சுலேவை மத்திய அமைச்சராக்குவதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் சரத்பவார் அந்தப் பேட்டியின் போது கூறினார்.

ஆனால் மோடியின் கோரிக்கைகளை தான் நிராகரித்து விட்டதாக பவார் தெரிவித்துள்ளார். நமது தனிப்பட்ட முறையிலான உறவு நன்றாக உள்ளது. அதனை அப்படியே தக்க வைத்து கொள்ளவே விரும்புகிறேன். அரசியலில் நம் இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவது எனக்கு சரிப்பட்டு வராது என மோடியிடம் திட்டவட்டமாக கூறியதாக சரத் பவார் பேட்டியில் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments