அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகால வளர்ச்சியை கொடுத்துள்ளோம்: எஸ்.பி.வேலுமணி பெருமிதம்

0 336

அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகால வளர்ச்சியை கொடுத்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அரசுக்கலைக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பேசினார்.

அப்போது, அனைவரும் சமகல்வி பெறும் வகையில் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் வீடுகள் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments