மலேசியாவில் இருந்து வந்த பயணியிடம் தங்கம் பறிமுதல்

0 417

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வந்த பயணியிடம் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த பைஸல் அகமது பின் அஷ்ரப் அலி என்ற பயணியைச் சோதனை செய்தபோது அவரது கால்சட்டையில் மறைத்து வைத்திருந்த 650 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இதையடுத்து அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த வியாழக்கிழமை கொழும்புவில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணியிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்பும் 2 கிலோ 67 கிராம் எடை கொண்ட 23 தங்கள் கட்டிகள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments