நோக்கியா நிறுவனத்தை சால்காம்ப் வாங்குவதற்கு உடன்பாடு

0 429

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா நிறுவனத்தை பின்லாந்தை சேர்ந்த சால்காம்ப் நிறுவனம்  வாங்கியுள்ளது.

தொழில் சம்பந்தப்பட்ட சிக்கல் காரணமாக, நோக்கியா நிறுவனம் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த சால்காம்ப் நிறுவனத்துடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, சால்காம்ப் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா நிறுவனத்தை வாங்குவதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, அடுத்த ஆண்டு முதல் உற்பத்தியை தொடங்கப்படுகிறது. இதன்மூலம், ஏற்கெனவே பணிபுரிந்த 7 ஆயிரம் பேருடன் கூடுதலாக 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும், அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு மேல் அந்த நிறுவனம் முதலீடு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments