மறைமுக தேர்தல் தொடர்பான அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி மனு

0 244

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தலுக்கு பதிலாக மறைமுக தேர்தல் நடைபெறும் என தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,  பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி மக்கள் பிரதிநிதிகள், மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படும்போது தான் இணக்கமான சூழல் ஏற்படும் என்றும், அதுவே கவுன்சிலர்கள் சேர்ந்து தேர்வு செய்யும் நபர்களுக்கும், மக்களுக்கும் நேரடித் தொடர்பு இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மறைமுக தேர்தல் என்பது அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும், அந்த முடிவு மக்களுக்கு விரோதமாக இருந்தால் அதில் தலையிடுவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும், ஆகவே நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டுமெனவும் அவரது மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments