டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த தீயணைப்பு வண்டி மூலம் மரங்களில் தண்ணீர் தெளிப்பு

0 226

டெல்லியில் நிலவி வரும் காற்று மாசை கட்டுப்படுத்தும் நோக்கில், மரங்களில் தீயணைப்பு வண்டி மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் அண்மை காலமாக காற்று மாசு அதிகரித்துள்ளதால், மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் காற்று மாசை கட்டுப்படுத்த மரங்களிலும், சாலைகளிலும் தண்ணீரை தெளிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி காற்று மாசு அதிகம் நிலவும் பகுதிகளாக அறியப்பட்ட ரோஹினி, துவாரகா, ஆனந்த் விகார், வாசிபூர், ஜஹாங்கிர் பூரி, ஆர்.கே. புரம், பவானா உள்ளிட்ட 13 இடங்களில் 20 தீயணைப்பு படை வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வண்டிகள் மூலம், அங்குள்ள மரங்களிலும், சாலைகளிலும் தண்ணீரை தீயணைப்பு படையினர் குழாய் மூலம் பீய்ச்சி அடித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments