21 வயதில் நீதிபதியாகும் ராஜஸ்தான் இளைஞர்..!

0 599

நாட்டிலேயே, மிக இள வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்பவர் எனும் பெருமையை ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெறவுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மானசரோவர் பகுதியைச் சேர்ந்தவர் மயங்க் பிரதாப் சிங். 21 வயதே ஆன இவர், தனது ஐந்து ஆண்டு சட்டப்படிப்பை ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பூர்த்திசெய்தார்.

இதையடுத்து இந்த ஆண்டு நடந்த நீதிபதிகளுக்கான தகுதி தேர்வில் கலந்துகொண்ட  மயங்க் பிரதாப், அதிலும் தேர்ச்சிபெற்றார். இதையடுத்து விரைவில் பதவி ஏற்க உள்ள அவர், இந்தியாவிலேயே மிக இள வயதில் நீதிபதி ஆனவர் எனும் சிறப்பையும் பெறவுள்ளார். நீதிபதி ஆவதற்கு குறைந்தபட்ச வரம்பாக  இருந்த 23 வயதை 21ஆக ராஜஸ்தான் நீதிமன்றம் இந்த ஆண்டு குறைத்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments