எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் 12 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்து வருகின்றனர்.
ஆத்தூரை அடுத்துள்ள நாரணமங்கலத்தில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. 2500க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி வருமான வரித்துறை இணை ஆணையர்கள் இரண்டு பேர் தலைமையிலான குழுவினர் எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் புதன்கிழமை அன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக காலை 9 மணி முதல் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
Comments