வறண்ட கிணற்றில் மழைநீர் சேமிப்பு.. விவசாயத்தில் அசத்தும் விவசாயி..!

0 356

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயி ஒருவர் வறண்டு கிடந்த தனது விவசாய  கிணற்றில் மழைநீரை சேமித்து,  தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி உள்ளார்.

சங்கரன்கோவில் அருகே உள்ள கோமதிமுத்துபுரத்தைச்சேர்ந்தவர் குணசீலன். 70 வயது நிரம்பிய பிஎஸ்என்எல் முன்னாள் ஊழியரான இவர் இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட அலாதி பிரியத்தால் தோட்டம் அமைத்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.

கடுமையான வறட்சியால் குளங்கள் நிறைவதே சவாலான நிலையில் இவரது தோட்டத்து கிணற்றில் 4 அடிக்கு மேல் தண்ணீர் வந்ததே கிடையாது. இந்நிலையில் குணசீலன் JCB எந்திரம் மூலம் ஊரணி அமைத்து, அதில் ஓடைகளை இனைத்து மழைகாலத்தில் ஓடும் தண்ணீரை சேமித்துள்ளார். பின்பு மோட்டார் மூலம் மழைநீர் சேமிப்பு தொட்டியில் நிரப்பி அங்கிருந்து கிணற்றுக்குள் பாய்ச்சியுள்ளார்.

இதன்மூலம் தனது 6 ஏக்கர் தோட்டத்தில் 100 சப்போட்டா மரம், 150 புளியமரம், தென்னை, பனை, வாழை, மக்காச்சோளம், பருத்தி, பாசி, கற்றாழை போன்றவற்றை விவசாயம் செய்து வருகிறார்.கிணற்றுக்குள் சேமிக்கும் மழை நீர் கோடைகாலத்திலும் விவசாயத்துக்கு கை கொடுப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்,குணசீலன்.

இவரைப்போல் வறண்ட பயனற்ற கிணறுகளில் மழை நீரை நிரப்பினால் தண்ணீர் பஞ்சம் என்ற நிலையே வராது என்று இயற்கை ஆர்வலர்கள் பாராட்டுகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments