ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லதே செய்வார் - ரஜினிகாந்தின் சகோதரர்

0 669

நடிகர் ரஜினிகாந்த் நல்ல மனிதர் என்றும், அவர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லதே செய்வார் என்றும் சகோதரர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் பிறந்த நாள் அடுத்த மாதம் வரவிருக்கும் நிலையில் தருமபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதன்படி ரஜினிகாந்த் நீண்ட ஆயுள் பெறவும், மக்கள் பணி ஆற்றிட வேண்டியும் சிறப்பு ஆபிசேகம், யாகம் உள்ளிட்டவை நடைபெற்றன.

இதில் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாரயணனும்,  குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினி எதற்கும் ஆசைப்பட மாட்டார் என்றும், அவர் குழந்தை உள்ளம் கொண்டவர் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments