இந்தியாவில் எங்கு பிரச்னை இருந்தாலும் அதற்கு குரல் கொடுப்பது திமுக

தமிழக பிரச்சனை மட்டுமல்ல, இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிரச்சனை என்றாலும் அதற்காக குரல் கொடுப்பது தி.மு.க தான் என்று, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க பொதுக்குழு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம், திருச்சி விமான நிலையம் அருகே நடைபெற்றது.
திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நேரு தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், திருச்சி திமுகவிற்கு நிறைய திருப்பு முனைகளை தந்துள்ளது.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றதற்கு, தமிழக மக்களே கரணம் என குறிப்பிட்டார் உதயநிதி. மேலும் விரைவில் தமிழ்நாட்டில் தி.மு.க வின் ஆட்சி அமைவதற்கு அனைவரும் உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Comments