ஆசிய சமையல் கலை போட்டியில் தென்னிந்திய சமையல் கலைஞர்கள் குழு வெற்றி

0 260

ஆசிய அளவிலான சமையல் கலை போட்டியில், தென் இந்தியாவில் இருந்து சென்ற குழு முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை சமையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் கொழும்பில் கடந்த மாதம் இப்போட்டி நடைபெற்றது. 8 நாடுகளில் இருந்து 2200 சமையல் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் 12 பேர் குழுவும்  கலந்துகொண்டது.

போட்டியில் அக்குழு 4 தங்கப் பதக்கங்களும், 4 வெள்ளி பதக்கங்களும், 6 வெண்கல பதக்கங்களும் என மொத்தம் 16 பதக்கங்களும் விருதுகளும் வென்றுள்ளன. அவர்களுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தி பார்க் நட்சத்திர விடுதியில் வரவேற்பும், பாராட்டும் அளிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments