9 வயது சிறுமிக்கு நடுத்தெருவில் நடந்த கொடுமை..! கொடூர தந்தை அடாவடி

0 683

மதுரை திருமங்கலம் அருகே தன்னுடன் கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை பார்த்துவிட்டு வந்த மகளை தெருவில் வைத்து அரக்கத்தனமாக அடித்து உதைத்து சித்ரவதை செய்த கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் கொடிமரத்ததெருவில் வசித்துவருபவர் அப்துல்சமது, இவரது மனைவி மும்தாஜ் இவர்களுக்கு இருமகள்கள் உள்ளனர்.

ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் குடி போதையில் மனைவியை அடித்து உதைப்பதை அப்துல் சமது வாடிக்கையாக செய்து வந்துள்ளான். கடந்த மாதம் மனைவி மும்தாஜை கொடுரமாக தாக்கியதால் அவர் தன்னை காப்பாற்ற எண்ணி வேறொரு தெருவில் உள்ள உறவினர் வீட்டில் பாதுகாப்புக்காக தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகின்றது. அப்போது இரு மகள்களையும் தாயுடன் அனுப்ப மறுத்த அப்துல்சமது இருவரையும் தன்னுடன் வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மூத்த மகளான 9 வயது சிறுமி புதன்கிழமை மாலை பள்ளிமுடித்து தனது தாயை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்ததாக கூறப்படுகின்றது. இதனை அறிந்த தந்தை அப்துல்சமது, குடி போதையில் வியாழக்கிழமை காலையில் சிறுமியிடம் தாய் இருக்கும்மிடத்தை கேட்டு வீட்டிற்குள் வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளான்.

வலிதாங்காத சிறுமி அலறிதுடித்துக்கொண்டு தெருவிற்கு ஓடிவர பின்னால் துரத்திவந்த தந்தை அப்துல், சிறுமியை சரமாரியாக தெருவில் இழுத்து போட்டு அடித்து கொடுமை படுத்தியுள்ளான்.

ஒரு கட்டத்தில் டியூப் லைட்டை எடுத்து சிறுமி மீது தாக்கி உள்ளான் அடித்து கீழே தள்ளி கழுத்தில் மிதித்து சித்ரவதை செய்த காட்சிகள் எல்லாம் அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தை தட்டிக் கேட்டவர்களையும் அப்துல் அடிக்கச் சென்றதால் முதலில் யாரும் அருகே செல்லவில்லை. சிறிது நேரத்தில் சிறுமி கொடுமையாக தாக்கப்படுவதை பொறுத்து கொள்ளாத அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அப்துலை தாக்கவே அங்கிருந்து ஓடிவிட்டான் என்கின்றனர் அப்பகுதி மக்கள். சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு திருமங்கலம் நகர் காவல்நிலையத்தில் அக்கம்பக்த்தினர் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கொடூர தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய அப்துல் சமதுமீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments