தமிழகம் முழுவதும் திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் விறுவிறுப்பு

0 249

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பினை மாநில தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு 14 தேதி முதல் விநியோகிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி 14ம் தேதியான இன்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும், திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித்தேர்தலில் திமுக சார்பில் மாநகர மேயர், நகராட்சி தலைவர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி கவுன்சிலர், ஊராட்சி உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோருக்கு, இன்று துவங்கி வரும் 20ம் தேதி வரை விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments