சிவசேனாவிடம் பிடிவாதம் பிடிக்கும் தேசியவாத காங்கிரஸ்

0 418

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவிடம் முதலமைச்சர் பதவி கேட்டு சிவசேனா வைத்த கோரிக்கையே, தேசியவாத காங்கிரஸ் மூலம், இன்று அக்கட்சிக்கே, திரும்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மகாராஷ்டிராவில், போதிய பெரும்பான்மை இல்லாததால், எந்த கட்சியும் ஆட்சியமைக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலானது. இருப்பினும், இதை எதிர்த்து சிவசேனா வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், அக்கட்சியுடனான கூட்டணி பற்றி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முடிவெடுக்க இயலாத சூழலே நிலவுகிறது.

இந்நிலையில், சிவசேனாவுக்கு, தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதம் வழங்குவதில் நீடித்த தேக்கம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், பாஜகவிடம், சிவசேனா வைத்த கோரிக்கையைப் போன்று, அக்கட்சியிடம், தேசியவாத காங்கிரசும், சுழற்சி முறையில், முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற வலியுறுத்தலை முன்வைத்தாலேயே, இழுபறி நீடித்ததாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments