தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

0 557

வெப்பசலனம் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக கூறினார்.

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறும் என்று குறிப்பிட்டார். வெப்பசலனம் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் புவியரசன் தெரிவித்தார்.

அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள மஹா புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளதாக கூறிய புவியரசன், வரும் 6 ஆம் தேதி இரவு அல்லது 7ஆம் தேதி அதிகாலை குஜராத்தில் கரை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments