ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

0 428

தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், பயணிகள் பாதுகாப்பான முறையில் பயணத்தை மேற்கொள்வதற்காக ரயில்வே போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் நிலையங்களில் சந்தேகப்படும் படியான நபர் அல்லது பொருள்கள் ஏதும் இருந்தால் உடனடியாக 1512 என்ற ரயில்வே போலீசார் உதவி எண்ணையும், 182 என்ற ஆர்பிஎஃப் உதவி எண்ணையும் அழைத்து தகவல் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்ரல் ரயில் நிலையத்தில் திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் தலைமையிலான அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments