மஞ்சளார் அணை நீர்மட்டம் உயர்வால் முதல் கட்ட வெள்ள எச்சரிக்கை

0 216

தேனி மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மஞ்சளார் அணைக்கு வினாடிக்கு 222 கன அடி தண்ணீர் வருகிறது. இதையடுத்து 57 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 52 புள்ளி 60 அடியை எட்டியுள்ளது.

இதனால் மஞ்சளார் ஆற்றங்கரையோரத்தில் உள்ள கெங்குவார்பட்டி, பு.கல்லுப்பட்டி, வத்தல்க்குண்டு உள்ளிட்ட கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் முதலாவது கட்ட வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

53 அடியை எட்டும்போது இரண்டாம் கட்ட வெள்ள எச்சரிக்கையும், ஓரிரு நாளில் 55 அடியாக உயரும் போது, 3 வது கட்ட இறுதி எச்சரிக்கை விடப்பட்டு உபரி நீர் ஆற்றில் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments