தமிழக அமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது குற்றச்சாட்டு

0 298

தமிழக அமைச்சர்களை தரைக்குறைவாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான பிரேம், தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அதில் நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த சீமான், தூத்துக்குடியில் தங்கியிருந்தபோது அளித்த பேட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், அமைச்சர்களையும் தரைக்குறைவாக பேசியதாகவும், இதற்காக சீமானை கைது செய்யவேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு மீது தென்பாகம் காவல்நிலைய ஆய்வாளர் கிருஷ்ணகுமார் விசாரணை நடத்தினார். இதையடுத்து காவல்நிலையத்தில் சீமான் மீது அவதூறாக பேசியது, கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments