வாக்காளர்களுக்கு பணம் என புகார் :எம்எல்ஏவை தாக்கியதாக கிராம மக்கள் 25 பேர் மீதும் வழக்குப்பதிவு

0 196

நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக எம்.எல்.ஏ சரவணகுமார் உட்பட 6 திமுகவினர் மீதும், எம் எல் ஏ வை தாக்கியதாக 25 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பலம் கிராமத்தில் பெரியகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தங்கி இருந்து தேர்தல் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் அருகில் உள்ள கல்லத்தி கிராமத்தில் இரு நபர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கூறி அப்பகுதி மக்கள் விரட்டிய போது இருவரும் எம்.ஏல்.ஏ இருந்த வீட்டுக்குள் சென்று பூட்டிக்கொண்டனர். விரட்டிச்சென்ற இளைஞர்களுக்கு, எம் எல் ஏ வுடன் மோதல் ஏற்பட்டு அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்கள் கொடுத்த  2 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயை கைப்பற்றி பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து எம்எல்ஏ சரவணகுமார் உட்பட 6 திமுகவினர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கும், எம்எல்ஏவைத் தாக்கியதாக அம்பலம் கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கும் மூலக்கரைப்பட்டி போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments