மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்

0 550

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேரம் ஒதுக்கி அசுரன் திரைப்படத்தை பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே, நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தை தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் மு.க.ஸ்டாலின் பார்த்து ரசித்தார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடி சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் என அசுரன் திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.

கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றி மாறனுக்கும், படத்தில் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுசுக்கும் பாராட்டுகள் என மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

ஸ்டாலினின் பாராட்டால் மகிழ்ச்சி அடைந்துள்ள தனுஷ், காலம் ஒதுக்கி அசுரன் திரைப்படத்தை
பார்த்ததற்கு நன்றி என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments