ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் தாக்குதலுக்கு திட்டம்

0 228

ஜம்மு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் அந்த நெடுஞ்சாலையில் செல்லும் அரசு வாகனங்களைக் கடத்தி அதன் மூலம் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து தீவிரவாதிகளின் அடுத்த எண்ணம் கார் குண்டுகள் மூலம் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதலாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக லஷ்கர் இ தொய்பா அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர் வந்த டிரக் ஒன்றின் ஓட்டுநர் ஷெரீப் கான் என்பவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இதையடுத்து அப்பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments