குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை நாட வேண்டும்

0 264

குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை நாடுமாறு கூறியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தாமதமாக அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை குணப்படுத்துவது மட்டுமே சவாலான காரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான பிரிவில் டெங்கு காய்ச்சல் குறித்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகளுக்கு சற்றும் தாமதிக்காமல் அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments