ஸ்கேட்டிங் விளையாட்டில் முதல் 2 இடங்களை பிடித்த பிரேசில் பெண் மற்றும் சிறுமி

0 118

ஸ்ரிட் லீக் உலக சாம்பியன்ஷிப் பெண்கள் பிரிவில் பிரேசிலைச் சேர்ந்த ஸ்கேட் போர்ட் வீராங்கனைகள் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

சாவோ பாலோ என்ற இடத்தில் 8 ஆயிரம் பேர் குழுமியிருந்த அரங்கத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது. பலகை மீது நின்று கொண்டு தாவுவதும் சுழலுவதுமாய் சவாரி செய்யும் ஸ்கேட்டிங் விளையாட்டில் பிரேசில் வீரர்கள் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக உலகளவில் பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே கைப்பற்றியுள்ளனர்.

ஸ்ரிட் லீக் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பமீலா ரோசா மற்றும் 11 வயது சிறுமி ரெய்சா லீல் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர். இருவரும் கிடத்தட்ட ஒரே புள்ளிகளை பெற்றுள்ளதால் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் தங்கள் வெற்றியை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்கள் பிரிவில் அமெரிக்காவின் நைஜா ஹஸ்டன் தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். ஜப்பானின் யூட்டோ ஹொரிகோம் இரண்டாவது இடத்தையும், போர்ச்சுகலின் குஸ்டாவோ ரிபேரோ மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments