ஐ.ஆர்.சி.டி.சி. - ஏ.சி. வசதியுள்ள ரயில்களில் 13 நாட்கள் சிறப்பு சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது

0 284

இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலாக் கழகமான ஐ.ஆர்.சி.டி.சி. குளிர்சாதனப் பெட்டி வசதியுள்ள ரயில்களில் 13 நாட்கள் சிறப்பு சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அடுத்த மாதம் 19-ஆம் தேதி திருச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ஏ.சி. ரயில் சென்னை பெரம்பூர், பெங்களூரு வழியாக உத்தரப்பிரதேச மாநில திவ்ய தேசங்கள், நேபாளத்தின் முக்திநாத், கஜேந்திர மோட்ச சாளக்கிராம மூர்த்தி தலம், போக்ரா பிந்து பாஷிணி ஆலயம், மகேந்திர குகைகள், உலக அமைதி நினைவாலயம், காட்மாண்டு தர்பார் சதுக்கம், பசுபதிநாதர் கோவில் உள்ளிட்ட இடங்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தி குளோரி கிங்டம் என்ற பெயரிலான மற்றொரு பிரிவு சுற்றுலாவில் லக்னோ உள்ளூர் சுற்றிப் பார்த்தல், புத்தர் பிறந்த இடமான லும்பினி, போக்ரா பிந்துபாஷிணி ஆலயம், மகேந்திர குகைகள், உலக அமைதி நினைவாலயம், காட்மாண்டு தர்பார் சதுக்கம், பசுபதிநாதர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரயில் கட்டணத்தில் ஏ.சி.ரயில் கட்டணங்கள், தென்னிந்திய சைவ உணவு, உள்ளூர் சுற்றிப்பார்க்க ஏ.சி. மற்றும் ஏ.சி. அல்லாத வாகனங்கள், ஏ.சி. அல்லாத தங்கும் அறை, போக்ரா விமானக் கட்டணம் உள்ளிட்ட வசதிகள் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments