1170 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன்கோவிலில் பொன் மாணிக்கவேல் ஆய்வு

0 521

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள 1170 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன்கோவிலில் ஐஜி பொன்மாணிக்கவேல் ஆய்வு செய்தார்.

நங்கவரத்தில் ராஜராஜசோழன் முப்பாட்டனார் காலத்தில் 1170 ஆண்டுகளுக்கு முன்னர் கோமலவள்ளி உடனுறை சுந்தரேஸ்வரர் சிவன் கோவில் கட்டப்பட்டது.


கலை அம்சங்களுடன் கூடிய கல்சிலைகள் 12-ம், ஐம்பொன் சிலைகள் 19-ம் இந்தக்கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படுகிறது.

புராதான கோவில் என்பதால் சிலை தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையில் காவல்துறையினர் நங்கவரம் சிவன்கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் மாணிக்கவேல், இந்த கோவிலில் விலைமதிப்பற்ற ஐம்பொன் சிலைகளும் விலைமதிக்கமுடியாத பழங்கால கற்சிலைகளும் பாதுகாக்கப்படாமல் பாழடைந்த அறையில் கிடப்பில் போட்டுவைக்கப்பட்டுள்ளது என்றார்.

மீண்டும் முறையான ஆவணங்களை எடுத்து இந்த கோவிலில் விரைவில் ஆய்வுசெய்யப்படும் என தெரிவித்தார்.

அதிக வருமானம் உள்ள இந்த கோவிலுக்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார் ராமலிங்கத்திற்கு மாதம் 300 ரூபாய் வழங்கப்படுவது மிகவும் வேதனை அளிப்பதாக பொன்மாணிக்கவேல் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வள்ளிக்கொள்ளைக்காடு கிராமத்தில் பொதுப்பணித்துறை பொறியாளர் சுப்பிரமணியன் வீட்டில் கட்டட பணிக்காக நிலத்தை தோண்டியபோது, 300 கிலோ எடையில் இருந்த நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

அதனை அதிகாரிகள் கைப்பற்றியதையடுத்து , பொதுமக்கள் சிலைக்கு பூ மாலையிட்டு வழிபட்டனர்.

அந்த சிலையை ஆய்வு செய்வதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் அங்கு விரைந்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments