காங்கிரஸ் ஒரு ஏமாற்றுக்கார கட்சி - மாயாவதி கடும் விமர்சனம்

0 390

ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், காங்கிரஸ் ஒரு ஏமாற்றுக்கார கட்சி என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியிலிருந்து விலகி ஆளும் கட்சியான காங்கிரசில் இணையப்போவதாக சபாநாயகர் சி.பி.ஜோஷியிடம் கடிதம் அளித்தனர்.

ராஜஸ்தானில் அடுத்த 2 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனிடையே எம்.எல்.ஏக்கள் திடீரென கட்சி மாறியதால் அதிர்ச்சியடைந்த பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் காங்கிரஸ் கட்சி எப்போதும் டாக்டர் அம்பேத்கருக்கும் அவரது சிந்தனைகளுக்கும் எதிரானது எனவும், அதனாலேயே நாட்டின் முதல் சட்ட அமைச்சர் பதவியை அம்பேத்கர் ராஜினாமா செய்ய வேண்டியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்கவில்லை என்பது வருந்ததக்கது மற்றும் வெட்ககேடானது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தங்கள் எம்.எல்.ஏக்கள் மூலம் பிளவை ஏற்படுத்தியதால், அது ஒரு நம்பத்தகாத மற்றும் ஏமாற்றுக்கார கட்சி என்பதை நிரூபித்து விட்டதாகவும் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தங்கள் எதிரிகளுடன் மோதுவதை விடுத்து, எப்போதும் தங்களை ஆதரிக்கும் கட்சிகளுக்கு தீங்கு விளைவிப்பதிலேயே குறியாக இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments