வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் பலி

0 446

அரியலூர் மாவட்டம் கீழப்பலூர் அருகே வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததில்,  சகோதரர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

பெரம்பலூர் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவரான முஜிபுல்லா, துபாயில் தற்போது பணிபுரிந்து வருகிறார்.

இவரது நண்பர் ஒருவர் துபாயில் இருந்து தஞ்சைக்கு வந்துள்ளார்.

எனவே அவர் மீண்டும் துபாய் செல்லும் போது அங்குள்ள தங்கள் தந்தை முஜிபுல்லாவிடம் கொடுப்பதற்காக சில பொருள்களை அவரது மகன்கள் பயாஸ் மற்றும் ஜமீல் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றனர்.

அரியலூர்-தஞ்சை சாலையில் சாத்தமங்களம் எனுமிடத்தில் மோட்டார் சைக்கிள் வந்தபோது முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றனர்.

அப்போது எதிரே, தஞ்சையில் இருந்து அரியலூரை நோக்கி திருமண கோஷ்டி இருந்த வேன் வந்துள்ளது. 

அப்போது மோட்டார் சைக்கிள், வேனின் பக்கவாட்டு பகுதியிலுள்ள டீசல் டேங்க் மீது வேகமாக மோதி அதன் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டது.

பைக்கில் இருந்த பயாஸ் இருவாகனங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டார். ஜமீல் மட்டும் தூக்கி வீசப்பட்டார்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிள் மோதியதால் வேனின் டீசல் டேங்க் சேதமடைந்து அதிலிருந்து டீசல் கசிந்தது.

வேனால் இழுத்துச் செல்லப்பட்டதில் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க்கும் சேதமடைந்ததுடன், உராய்வு காரணமாக அதில் தீப்பிடித்தது. இந்தத் தீ, வேன் முழுவதும் மளமளவென்று வேகமாக பரவியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments