2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

0 574

நெல்லையில் தனது இரு குழந்தைகளையும் கொலை செய்து தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகில் வசித்து வருபவர் மைக்கேல். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், சக்தி அனுசுயா என்ற 5வயது மகளும், துரைசிங் என்ற 4வயது மகனும் உள்ளனர்.

மாரியம்மாளுக்கு மனநிலை சரியில்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு மாரியம்மாள் திடீரென்று தனது இரு குழந்தைகளின் முகத்தின் மீது தலையணையால் அமுக்கி கொலை செய்த தாக தெரிகிறது.

இதில் சக்தி அனுசுயா சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தார். துரைசிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையில் இரு குழந்தைகளும் இறந்து விட்டதாக கருதிய மாரியம்மாள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீஸ் விசாரணையில் மாரியம்மாளுக்கு ஏற்கனவே 3வதாக ஒரு வயதில் அனாலிகா பிரகாஷினி என்ற பெண் குழந்தை இருந்துள்ளது என்பதும் அந்த குழந்தைக்கு எறும்பு பவுடர் கலந்த உணவை ஊட்டியதால் இறந்து போனது என்பதும் தெரிய வந்துள்ளது.

மனநலன் பாதித்ததால் இந்த கொலைகளை செய்தாரா அல்லது குடும்பத் தகராறு காரணமாக நடைபெற்றதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments