MLA-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 3 கோடியாக அதிகரிப்பு

0 949

இரண்டரை கோடி ரூபாயாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை 3 கோடி ரூபாயாக அதிகரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற ஆண்டு தோறும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுகிறது. இந்த நிதிக்காக இதுவரை சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆண்டு தோறும் தலா 2 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.

இந்த நிதியை உயர்த்துமாறு சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை 3 கோடி ரூபாயாக அதிகரித்து அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments