10 நகரங்களில் இன்றும் நாளையும் அனல்காற்றுக்கு வாய்ப்பு

0 2056

தமிழகத்தில் 10 நகரங்களில் இன்றும் நாளையும் அனல்காற்று வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம்,திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், சேலம் ஆகிய நகரங்களிலும் புதுச்சேரியிலும் இரண்டு நாட்கள் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர்,
திருநெல்வேலி, மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments