சிறுமியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை விவகாரம், ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வர் முடிவெடுக்க உத்தரவு

0 220

தேனியைச் சேர்ந்த சிறுமியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குவது குறித்து, 2 வாரங்களில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வர் முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனியை சேர்ந்த சுல்தான் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது 13 வயது மகளின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது தனது மகளுக்கு உறவினர் ஒருவர் சிறுநீரகம் ஒன்றை தானம் செய்ய முன்வந்துள்ளதாகவும், மகளின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை குழுவினர் அனுமதி மறுப்பதாக தெரிவித்தார்.

மேலும் சென்னையில் உள்ள மாநில கமிட்டியிடம் ஒப்புதல் பெற நிர்ப்பந்திப்பதாக கூறிய அவர், காலதாமதம் மகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை முதல்வர் உடனடியாக அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், மதுரை,கோவை அரசு மருத்துவமனைகளில் இருக்கும் சிறுநீரக மாற்று குழுவினரே அனுமதி வழங்கலாம் என தெரிவித்ததோடு, ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வர் 2 வாரங்களுக்குள் முடிவெடுக்கும்படி உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments