ஆசியாவிலேயே முதன்முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவாக சட்டம்

0 2403

ஆசியாவிலேயே முதன்முறையாக ஓரினச் சேர்க்கை திருமணத்தை அங்கீகரித்து தைவான் நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து வாழ்வது சட்டப்படி சரி என்றும், தவறு என்றும் பல்வேறு நாடுகள் சட்டத்தை இயற்றியுள்ளன. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் மட்டுமே இருந்து வந்த இந்த நடைமுறை முதன்முறையாக தற்போது ஆசியக் கண்டத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாகவே தைவானில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் ஏற்கனவே இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் தற்போது அந்நாட்டில் தங்களுக்கு ஆதரவாக சட்டம் இயற்றப்பட்டிருப்பது ஓரினச் சேர்க்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments