அம்பேத்கர் சிலைக்கு காவி நிறம்..! அரசியல் தலையீடு எதுவும் இல்லை என பாஜக மறுப்பு

0 458

உத்தரப்பிரதேசத்தில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட சட்டமேதை அம்பேத்கரின் திருவுருவச்சிலை, தற்போது சீரமைக்கப்பட்டு, காவி நிறம் பூசப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

பதாவுன் ((Badaun)) மாவட்டத்தில் உள்ள துக்ரையா ((Dugraiya)) கிராமத்தில் கடந்த 7ஆம் தேதி சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச்சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. பொதுமக்களின் போராட்டம் காரணமாக, அந்த சிலையை சீரமைத்த அதிகாரிகள், அம்பேத்கரின் சிலைக்கு காவி நிறத்தை பூசியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சிகள், அம்பேத்கர் சிலைக்கு காவி நிறம் பூசியது, பாஜகவின் அரசியல் என விமர்சித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ. பிரேம் ஸ்வரூப் பதக், சிலைக்கு காவி நிறம் பூசப்பட்டதில் பாஜகவின் தலையீடு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments